×

பொன்னமராவதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

பொன்னமராவதி, ஜன.19: பொன்னமராவதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு திருமயம் எம்எல்ஏ ரகுபதி நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பொன்னமராவதியில் உள்ள வீரப்பெருமாள் மண்டபத்தில் அட்சயா மாற்றுத் திறனாளிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு அட்சயா மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க மாநிலத் தலைவர் முகமது காசிம் தலைமை வைத்தார். ஒன்றிய குழுத்தலைவர் சுதா, திமுக ஒன்றிய செயலாளர்கள் அடைக்கலமணி முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருமயம் எம்எல்ஏ ரகுபதி பொங்கல் பொருட்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் ஒன்றியக்குழு துணைத்தலைவர் தனலட்சுமி அழகப்பன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயராமன், மாவட்ட துணைச் செயலாளர் சின்னையா, முன்னாள் நகர செயலாளர் கோவை ராமன், பொதுக்குழு உறுப்பினர் தென்னரசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : persons ,Ponnamaravathi ,
× RELATED ஆடு திருடமுயன்ற இரண்டு பேர் கைது