கோக்குடி கிராமத்தில் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகள் ஆய்வு

அரியலூர்,ஜன,19: அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அடுத்த கோக்குடி கிராமத்தில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ரத்னா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொங்கல் விழாவை முன்னிட்டு கோக்குடி கிராமத்திலுள்ள அந்தோணியார் ஆலயத்தில் இன்று (19 ம் தேதி) நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்காக அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் .ரத்னா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாதுகாப்பு ஏற்பாடுகள், காளைகள் ஓடும் வழிகள், வீரர்கள் நின்று காளைகளை அடக்கும் இடம், பார்வையாளர்கள் நின்று பார்வையிடும் இடங்கள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகள் குறித்தும் கலெக்டர் கேட்டறிந்தார்.ஆய்வின் போது அரியலூர் கோட்டாட்சியர் (பொ)பாலாஜி, எஸ்பி னிவாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags : Inspection ,village ,
× RELATED சுகாதார பணிகள் எம்.பி.,ஆய்வு