ஆலத்தூர் ஒன்றிய பகுதியில் சைக்கிள் பேரணி

பாடாலூர், ஜன19:ஆலத்தூர் ஒன்றிய பகுதியில் உள்ள ஊராட்சித்துறை சார்பில்சைக்கிள் தினத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது. ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சித் துறை சார்பில் சைக்கிள் தினத்தை முன்னிட்டு நேற்று ஒவ்வொரு ஊராட்சியிலும் சைக்கிள் தின பேரணி நடைபெற்றது. இதில் அந்ததந்த ஊராட்சி பகுதிகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு அந்தந்த ஊராட்சியைச் சேர்ந்த தலைவர்கள் பரிசுகளை வழங்கினர். அதேபோல் தெரணி ஊராட்சியில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் பரிசு வழங்கினார். விழாவில் துணைத்தலைவர் மகாலட்சுமி ராமச்சந்திரன், ஒன்றியக் குழு உறுப்பினர் செல்வி தங்கராசு உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்

Tags : Bicycle rally ,Alathur Union ,area ,
× RELATED பிட் இந்தியா சைக்கிள் பேரணி