அரியலூர் மாவட்டத்தில் பரவலாக மழை

அரியலூர்,ஜன.19:அரியலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.இதனால் உளுந்து அறுவடை பணி பாதிக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் திருமானூர், திருமழப்பாடி, கீழப்பழுவூர், அரியலூர் வி.கைகாட்டி, செந்துறை, பொன்பரப்பி, குழுமூர், ஆர்எஸ்.மாத்தூர் ஆகிய பகுதிகளில் நேற்று காலை முதல் சாரல் மழையும், சில இடங்களில் சற்று கனமழையும் பெய்தது. இதனால் திருமானூர், திருமழப்பாடி, ஏலாக்குறிச்சி உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் உள்ள நெல் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். அரியலூர், செந்துறை சுற்று வட்டாரப் பகுதிகளில் தற்போது பருத்தி, உளுந்து அறுவடை பணி தீவிரமாக செய்துவரும் நிலையில், இந்த மழை அப்பகுதி விவசாயிகளுக்கு பணியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Ariyalur district ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் 4 இடங்களில் சிறப்பு திட்ட முகாம்