×

நாகை மாவட்டத்தில் 1.44 லட்சம் குழந்தைகளுக்கு இன்று போலியோ மருந்து கொடுக்க இலக்கு 11 நடமாடும் வாகனங்களிலும் வழங்கப்படும்

நாகை, ஜன.19: இந்தியா முழுவதும் போலியோ நோயை முற்றிலுமாக ஒழிக்க தமிழகம் முழுவதும் ஜனவரி மாதம் 19ம் தேதி தீவிர போலியோ நோய் ஒழிப்பு சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. அன்றைய தினம் மாவட்டத்தில் பிறந்தது முதல் 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ நோய் ஒழிப்பு சொட்டு மருந்து வழங்கப்படும். இதன்படி போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் இன்று (19ம்) நடைபெறுகிறது. மாவட்டத்தில் கிராம பகுதிகளில் 932ம் நகர பகுதிகளில் 95ம் ஆக மொத்தம் 1027 மையங்களில் 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச போலியோ நோய் ஒழிப்பு சொட்டு மருந்து காலை 7 முதல் மாலை 5 மணி வரை வழங்கப்படுகிறது. இம்முகாமில் 1 லட்சத்து 44 ஆயிரத்து 471 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இவை அனைத்து வழிபாட்டு தலங்கள், சுற்றுலா தலங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், தற்காலிகமாக தெரு ஓரங்களில் வசிக்கும் நாடோடிகள், பொம்மை செய்பவர்கள், கட்டிட வேலை மற்றும் செங்கல் சூளைகளில் பணிபுரிபவர்கள் என்று அனைவரின் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவசமாக வழங்கப்படும். இம்முகாமில் விடுபட்ட குழந்தைகளுக்கு நாளை (20ம் தேதி) மற்றும் 21 ஆகிய தேதிகளில் களப்பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் போக்குவரத்து வசதி இல்லாத உட்கிராமங்களுக்கு 11 நடமாடும் வாகனங்கள் மூலமாக போலியோ சொட்டு மருந்து வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மயிலாடுதுறை, சீர்காழி நாகை, வேதாரண்யம் ஆகிய நகராட்சி பஸ்ஸ்டாண்ட் மற்றும் நாகை, மயிலாடுதுறை மற்றும் சீர்காழி ரயில்வே ஸ்டேசகளிலும் 24 மணி நேரமும் இன்றுமுதல் (19ம் தேதி) வரும் 21ம் தேதி வரை 3 நாட்கள் இலவசமாக போலியோ நோய் ஒழிப்பு சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

Tags : district ,Nagai ,children ,
× RELATED நாகை மாவட்டம் கீழ்வேளூரில் அருகே தீ...