×

வெண்டைச்செடியில் பூத்து குலுங்கும் பூக்கள் கர்நாடகாவில் இருந்து வரும் நீரின் அளவு குறைந்ததால் கரூர் காவிரி ஆற்றில் மணல் திட்டுகளாக தெரியும் அவலம்

கரூர், ஜன. 19: கர்நாடகாவில் இருந்து வரும் நீரின் அளவு குறைந்ததையடுத்து காவிரியாற்றில் மணல் திட்டுக்கள் தெரிகின்றன. மேட்டூர் அணை நிரம்பியதை தொடர்ந்து அணைக்கு கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் நீர் அப்படியே திறந்து விடப்பட்டது. கடந்த 3 மாதமாக நீர்வரத்து அதிகமாக இருந்தது. கடந்த ஒரு மாதமாக நீர்வரத்து குறைந்து விட்டது. கரூர் மாவட்டம் மாயனூரில் காவிரியில் வரும் நீரின் அளவு கணக்கிடப்படுகிறது. கடந்த 3 மாதத்திற்கு முன்னர் 40 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் வந்தது. இந்த அளவு குறைந்து கொண்டே வந்தது. நேற்றைய நிலவரப்படி கரூர்மாவட்டம் மாயனூர் கதவணைக்கு 7670 கன அடி நீர் வந்தது. அணையில் இருந்து 6850 கன அடி நீர் திறக்கப்படுகிறது. கட்டளை மேட்டுவாய்க்கால் 150 கனஅடி, தென்கரை வாய்க்கால் 650 கனஅடி, கிருஷ்ணராயபுரம் வாய்க்காலில் 20 கன அடிநீர் திறக்கப்பட்டது.

நீர்வரதது குறைந்ததையடுத்து காவிரியாற்றில் மணல் திட்டுக்கள் தெரிய ஆரம்பித்து விட்டன. கரூர் மாவட்ட பகுதியில் உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பில் குடிநீர் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் எதிர்திசையான நாமக்கல் மாவட்ட பகுதி தாழ்வாக இருப்பதால் வரும் குறைந்த அளவு நீரும் அப்பகுதியில் தேங்கி செல்கிறது. நீர்வரத்து மேலும் குறைந்தால் குடிநீர் கிணறுகளுக்கு தண்ணீர் வரத்தும் குறைந்து விடும் நிலை உள்ளது. காவிரி நீர் பிரச்னையில் நடுவர் மன்ற தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடகம் தமிழகத்தற்கு உரியநீரை தருவதில்லை. கோடைகாலம் வரும்போதுதான் இப்பிரச்சனை எழுகிறது. மழைக்காலத்தில் மத்திய மாநில அரசுகள் இதனை கண்காணிக்காமல் இருப்பதும், உரிய நீரை பெறாமல் தட்டிக்கழிப்பதும் தொடர்கிறது என விவசாயிகள் தெரிவித்தனர். கரூர் மாவட்டத்தில் பருவமழை நிறைவடைந்துவிட்டது. தற்போது கடும் பனிபொழிவு உள்ளது. பகல் 8மணி வரை சாலையில் பனிப்பொழிவு இருப்பதால் வாகனங்கள் முகப்பு விளக்குகளுடன் சென்று வருகின்றன.

Tags : river ,Karnataka ,Karur ,sand dunes ,
× RELATED மடப்புரம் ஓடம்போக்கி ஆற்றின்...