×

சுங்க சாவடியில் முன்னாள் எம்எல்ஏவிடம் கெடுபிடி கரூர் மாவட்ட மா. கம்யூ செயலாளர் கண்டனம்

கரூர், ஜன. 19: முன்னாள் எம்எல்ஏவிடம் சுங்க சாவடி ஊழியர்கள் துப்பாக்கியுடன் கெடுபிடி செய்ததற்கு கம்யூ. மாவட்ட செயலாளர் கண்டனம் தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்ட செயலாலர் கந்தசாமி அறிக்கையில் கூறியதாவது, கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், திண்டுக்கல் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான கே.பாலபாரதி காரில் கரூர் அருகில் உள்ள மணவாசி டோல் கேட்டை கடக்கும் போது தனது முன்னால் எம்எல்ஏ பாசை கட்டிய போதும் அவரை அனுமதிக்காமல், பணியிலிருந்த ஊழியர்கள் கடுமையாக பேசியுள்ளனர். மேலும் தான் முன்னாள் எம்எல்ஏ என்று கூறியும், அனுமதிக்கான அனுமதி சீட்டு உள்ளது என்று கூறியும் டோல்கேட் நிர்வாகம் அனுமதிக்கவில்லை.

இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டக் குழு வன்மையாக கண்டிக்கிறது. டோல்கேட்டில் பேச்சு வார்த்தை நடத்தும் போது, சம்பந்தப்பட்ட அதிகாரியை அழையுங்கள் பேசுகிறேன் என்று சொல்லியும்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்று கூட பார்க்காமல் அடியாட்களாக மாறி துப்பாக்கி ஏந்திய நபரை வைத்து மிரட்டியுள்ளனர். மாவட்ட நிர்வாகம் அவர்களையும், டோல்கேட் அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பவத்தை கேள்விப்பட்டு செய்தி சேகரிக்க சென்ற டிவி நிருபர் மீது வழக்கு பதிவு செய்வதாக மிரட்டியுள்ளார்கள். மேலும் அடியாட்களை வைத்து இரட்டை வழி ரோட்டில் பயணிகளிடம் மிரட்டி கட்டண வசூலில் ஈடுபடும் டோல்கேட் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும், சம்பந்தப்பட்ட சமூக விரோதிகளாக மாறிய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டக்குழுவின் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது என்று கூறினார்.

Tags : MLA ,customs office ,Communist Secretary ,
× RELATED அதிமுக மாஜி எம்எல்ஏ காரில் சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்