பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் தேர்தல் அதிகாரிகள் தகவல் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி

வேலூர், ஜன.19:ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கு இடையே போட்டிகள் நடைபெற உள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.தேசிய வாக்காளர் தினம் ஆண்டுதோறும் ஜனவரி 25ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. வாக்காளர் தினத்தையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்கள் இடையே, ‘வலிமையான மக்களாட்சி, தேர்தல் கல்வி அறிவு’ என்ற தலைப்பில் கவிதை, கட்டுரை, பேச்சு, ஓவியப்போட்டிகள் நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

அதன்படி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த வாரம் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இடையே இந்த போட்டி நடந்தது. 9 கல்லூரிகளில் நடந்த போட்டியில் 87 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையேயான போட்டிகள் நாளை தொடங்க உள்ளது. இதில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளில் முதல் 3 இடங்களை பிடிப்பவர்களுக்கு தேசிய வாக்காளர் தினமான 25ம் தேதி பரிசு வழங்கப்படும் உள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: