பொங்கல் தினத்தன்று ₹18.95 கோடிக்கு மதுவிற்பனை டாஸ்மாக் அதிகாரிகள் தகவல் ஒருங்கிணைந்த வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில்

வேலூர், ஜன.19: ஒருங்கிணைந்த வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் பொங்கல் தினத்தன்று ₹18.95 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகத்தில் ஆண்டு தோறும், தீபாவளி, புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையின்போது டாஸ்மாக் மது விற்பனை களைகட்டி வருகிறது. பண்டிகை நாட்களின்போது தட்டுப்பாடின்றி அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் அதிகளவில் சரக்குகள் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் விற்பனை வருவாய் இலக்கும் முன்கூட்டியே நிர்ணயிக்கப்படுகிறது. அதேபோல் இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பே அனைத்து டாஸ்மாக் கடைக்கும் அதிகளவில் டாஸ்மாக் சரக்குகள் அனுப்பி வைக்கப்பட்டன.

ேவலூர் மாவட்டத்தில் ேவலூர், அரக்கோணம் என்று 2 டாஸ்மாக் மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு விற்பனை விவரம் கணக்கிடப்படுகிறது. இதில் வேலூர் மண்டலத்தில் 116 கடைகளும், அரக்கோணம் மண்டலத்தில் 83 கடைகளும் உள்ளன. பொங்கல் பண்டிகையொட்டி அனைத்து மது வகைகளும் இருப்பில் வைக்கப்பட்டு இருந்தது. வேலூர் மண்டலத்தில் பொங்கல் பண்டிகைநாளில் 5305 பீர் பாட்டில்கள் அடங்கிய கேஸ்களும், 9240 ஹாட் வகை மதுபாட்டில்கள் என மொத்தம் ₹5.82 கோடிக்கு விற்பனையானது.

அதேபோல், அரக்கோணம் டாஸ்மாக் மண்டலத்தில் 3,152 பீர்பாட்டில்கள் அடங்கிய கேஸ்களும், 7095 ஹாட் வகை மதுபான பாட்டில்கள் என்று மொத்தம் ₹4.27 கோடிக்கு விற்பனையானது. அதன்படி பொங்கல் பண்டிகையில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் மொத்தம் ₹10.09 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் 8.97 கோடிக்கு மது விற்பனையானது, கடந்த ஆண்டை விட இந்தாண்டு 1.12 கோடிக்கு அதிகமாக மது விற்பனையானது என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கி வரும் 216 டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கி வருகிறது. இதில் பொங்கல் பண்டிகை நாட்களில் மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. விற்பனையும் அமோகமாக நடந்தது. திருவள்ளுவர் தினமான மாட்டுப்பொங்கலன்று மதுக்கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டது. ஆனாலும், முன்கூட்டியே தைப்பொங்கலன்று மது பாட்டில்களை மதுபான பிரியர்கள் வாங்கி இருப்பு வைத்து குடித்தனர். அதன்படி, பொங்கல் திருநாளான கடந்த 15ம் தேதி ₹8.86 ேகாடி மதிப்பிலான மதுபானம் விற்பனையானது.

மேலும், கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது ₹14.06 கோடிக்கு மதுபானம் விற்பனையானது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு சுமார் ₹1 கோடிக்கும் அதிகமாக மதுபானம் விற்பனையாகியிருக்கிறது. ஒருங்கிணைந்த வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் ₹18.95 கோடிக்கு மதுவகைகள் விற்பனையாகியுள்ளது. கல்வி மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய, வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்கள் நிறைந்த மாவட்டங்களில் ஆண்டுதோறும் மது விற்பனை அதிகரித்து வருவது சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

Related Stories: