(வேலூர்) மாடு விடும் விழாவில் சீறி பாய்ந்த காளைகள் 15 பேர் காயம் கீழ்அரசம்பட்டு, கோவிந்தரெட்டிபாளையத்தில்

வேலூர், ஜன. 19: கீழ்அரசம்பட்டு, ஊசூர் அடுத்த கோவிந்தரெட்டிப்பாளையத்தில் மாடு விடும் விழாவில் காளைகள் சீறிய பாய்ந்தன.வேலூர் அடுத்த கீழ்அரசம்பட்டு கிராமத்தில் மாடு விடும் விழா நேற்று நடந்தது. காலை 10 மணி தொடங்கிய மதியம் 2 மணி வரை நடந்தது. இதில் வேலூர், கணியம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 90 காளைகள் பங்கேற்று சீறிபாய்ந்தது. விழாவை ஆர்டிஓ கணேஷ், டிஎஸ்பி பாலகிருஷ்ணன், தாசில்தார் சரவணமுத்து மற்றும் அதிகாரிகள் கண்காணித்தனர். இதில் 6 காளைகள் மாடுவிழாவில் பங்கேற்க கால்நடை மருத்துவர்கள் தடைவித்தனர். மாடு விடும் விழாவில் 5க்கும் மேற்பட்டவர்கள் லேசான படுகாயமடைந்தனர். விழாவை பார்க்க சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் குவிந்தனர்.

இதேபோல், அணைக்கட்டு தாலுகா ஊசூர் அடுத்த கோவிந்தரெட்டிபாளையம் கிராமத்தில் மாடு விடும் விழா நேற்று நடந்தது. காலை 10.30 மணிக்கு தொடங்கி, மதியம் 1.30 மணி வரை நடந்து. இதில் ஒவ்வொரு காளையும் 2 முதல் 4 சுற்றுகள் விடப்பட்டன. இதில் அணைக்கட்டு, ஊசூர், புலிமேடு, அத்தியூர், கோவிந்தரெட்டிபாளையம் உள்ளிட்ட உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து 70க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று சீறிபாய்ந்து ஓடின. முன்னதாக கால்நடை மருத்துவர் பரிசோதனைக்கு பின்னர் மாடுகள் ஒவ்வொன்றாக வீதியில் அவிழ்த்துவிடப்பட்டன.

விழாவை உதவி ஆணையர் (கலால்) பூங்கொடி, தாசில்தார் முரளிகுமார், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கீதா, வருவாய் ஆய்வாளர் நித்யா, விஏஓ தமிழ் ஆகியோர் கண்காணித்தனர். மேலும், விழாவையொட்டி, டிஎஸ்பிக்கள் ராஜேந்திரன், ராமசந்திரன் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள், நந்தகுமார், திருமால் மற்றும் அரியூர் போலீசார் உள்பட 100க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டு இருந்தனர்.

விழாவில் 10 பேர் மாடு முட்டியதில் காயமடைந்தனர். அவர்களுக்கு ஊசூர் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ குழுவினர்கள் சிகிச்சை அளித்தனர். அதில் படுகாயமடைந்த ஒருவர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கீழ்அரசம்பட்டு, கோவிந்தரெட்டிபாளையத்தில் நடந்த மாடு விடும் விழாக்களில் 15 ேபர் படுகாயமடைந்தனர்.

Related Stories: