×

வேலூர் புதிய பஸ் நிலைய கட்டிடங்கள் அகற்றுவதற்கான நடவடிக்கைகள் தீவிரம் 2 தற்காலிக பஸ்நிலையங்களுக்கு திட்ட அறிக்கை ₹45.61 கோடியில் நவீன வசதிகளுடன் வடிவமைக்க

வேலூர், ஜன.19: ₹45.61 கோடியில் நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட உள்ள வேலூர் புதிய பஸ் நிலைய பணிகளுக்காக அங்குள்ள பழைய கட்டிடங்களை அகற்றும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளது. மேலும் 2 தற்காலிக பஸ்நிலையங்கள் அமைக்க திட்ட அறிக்கை தயாராகி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் ஒரு பகுதியாக வேலூர் புதிய பஸ்நிலையத்தில் உள்ள பழைய கட்டிடங்களை அகற்றிவிட்டு நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் ₹45.61 கோடியில் ஓரடுக்கு பஸ்நிலையம் அமைக்கப்பட உள்ளது. அதன்படி, வேலூர் புதிய பஸ் நிலையத்தில் அழகு செடிகளை பராமரிக்க வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பிகள் வெல்டிங் மூலம் அகற்றும் பணிகள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. தொடர்ந்து கட்டிடங்கள் அகற்றும் பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளது என்றும், தற்காலிகமாக 2 பஸ்நிலையங்கள் அமைக்க திட்ட அறிக்கை தயாராகி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘வேலூர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள பழைய கட்டிடங்களை விரைவில் அகற்றுவதற்கான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் செல்லியம்மன் கோயில் பின்புறம் உள்ள பஸ் நிலையத்துக்கு சொந்தமான காலி இடத்திலும், பழைய பஸ்நிலையத்திலும் தற்காலிகமாக 2 பஸ் நிலையங்கள் அமைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, செல்லியம்மன் கோயிலுக்கு பின்புறத்தில் இருந்து சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட ஊர்களுக்கும், பழைய பஸ்நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, ஓசூர், பெங்களூரு போன்ற இடங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த அறிக்கை கலெக்டர் சண்முகசுந்தரத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டு, ஒப்புதல் பெற்று செயல்படுத்தப்படும்’ என்றனர்.

Tags :
× RELATED 8 கைதிகள் தபால் வாக்கு செலுத்தினர் வேலூர் மத்திய சிறையில்