எல்லையம்மன் கோயிலில் தெப்பல் உற்சவம் காணும் பொங்கலையொட்டி

செய்யாறு, ஜன.19: செய்யாறு அருகே எல்லையம்மன் கோயிலில் காணும் பொங்கலையொட்டி தெப்பல் உற்சவம் நடந்தது. செய்யாறு தாலுகா இளநீர்குன்றம் கிராமத்தில் எல்லையம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் காணும் பொங்கலையொட்டி தெப்பல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு தெப்பல் உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு, ஊஞ்சல் தாலாட்டு சேவை நடந்தது.

இதையடுத்து, கோயில் அருகிலுள்ள குளத்தில் தெப்பல் உற்சவம் நடந்தது. பின்னர், சிறப்பு அலங்காரத்தில் எல்லையம்மன் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். முன்னதாக ஒற்றுமை, சகோதரத்துவம் வளர்க்கும் பொருட்டு முயல் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

Tags : festival ,Pongaliyoti Theppal ,Elliyyamman temple ,
× RELATED காரைக்கால் அம்மையார் கலையரங்கில் சங்கீத மும்மூர்த்திகள் ஆராதனை விழா