இளைஞர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எஸ்பி அலுவலகத்தில் கிராம மக்கள் மனு திருவண்ணாமலை அருகே திருவிழாவை பார்க்க சென்ற

திருவண்ணாமலை, ஜன.19: திருவண்ணாமலை அருகே திருவிழாவை பார்க்க சென்ற இளைஞர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் நேற்று எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்தனர்.திருவண்ணாமலை அடுத்த ஜப்திகாரியந்தல் கிராமத்தில் நேற்று முன்தினம் பொங்கல் பண்டிகையையொட்டி சங்கோதியம்மன் கோயில் திருவிழா நடந்தது. விழாவில், இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, ஒரு தரப்பை சேர்ந்த அறிவழகன், விமல், ராஜ்குமார், தினேஷ்குமார், சூர்யா ஆகிய 5 இளைஞர்கள் படுகாயமடைந்தனர்.இந்நிலையில், பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தரப்பை சேர்ந்த கிராம மக்கள் நேற்று, விசிக மாவட்ட செயலாளர் செல்வம் தலைமையில் எஸ்பி அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

கடந்த 17ம் தேதி இரவு ஜப்திகாரியந்தல் கிராமம் சங்கோதியம்மன் கோயிலில் நடந்த விழாவை பார்க்க சென்ற எங்கள் தரப்பை சார்ந்த இளைஞர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த 5 பேரும் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், எங்கள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வீடுகளை சேதப்படுத்தியுள்ளனர். இதனால் நாங்கள் அச்சத்தில் இருந்து வருகிறோம். எனவே, இளைஞர்களை தாக்கியவர்கள், குடியிருப்புகளை சேதப்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Tags : office ,SP ,Thiruvannamalai ,festival ,
× RELATED ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க கோரி...