குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தற்கொலை செய்யாறு அருகே

செய்யாறு, ஜன.19: செய்யாறு அடுத்த விளாரிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன், விவசாயி. இவரது மனைவி ராணி(42). இவர்களுக்கு கடந்த 15 வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை. இதனால், ராணி மனவேதனையில் இருந்து வந்தாராம். இந்நிலையில், கடந்த 15ம் தேதி ராணி தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் ராணி இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் அனக்காவூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்ஜெய்குமார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : child suicide ,
× RELATED திருநம்பியை மணந்த இளம்பெண் பாதுகாப்புகோரி நீதிபதியிடம் மனு