திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் எ.வ.வேலு எம்எல்ஏ பங்கேற்பு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட

திருவண்ணாமலை, ஜன.19: திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் எ.வ.வேலு எம்எல்ஏ கலந்து கொண்டார். திருவண்ணாமலை மாவட்ட திமுக அலுவலகத்தில் நேற்று, தெற்கு மாவட்ட திமுக ஒன்றிய, நகர, பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சி.என்.அண்ணாதுரை எம்பி தலைமை தாங்கினார். மாவட்ட துணை அமைப்பாளர்கள் பொன்.தனசு, அ.அருள்குமரன் முன்னிலை வகித்தனர். இதில் தெற்கு மாவட்ட செயலாளர் எ.வ.வேலு எம்எல்ஏ உட்பட பலர் பேசினர்.

இக்கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் தங்கக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடத்துவது, இளைஞர் அணி உறுப்பினர் சேர்த்தலில் சென்ற முறை தமிழகத்தில் இரண்டாம் இடம் பிடித்து பாராட்டுகளை பெற்ற திருவண்ணாமலை மாவட்டம் இம்முறை முதலிடத்தை பெறும் அளவிற்கு இளைஞர் அணி உறுப்பினர்களை சேர்ப்பது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.இதில் மாவட்ட துணைச்செயலாளர் சாவல்பூண்டி மா.சுந்தரேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.தரன், எம்எல்ஏ மு.பெ.கிரி மாவட்ட துணை செயலாளர் சி.சுந்தரபாண்டியன், எ.வ.வே.கம்பன் நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Executives Advisory Meeting ,DMV Youth Team ,EV Velu MLA ,
× RELATED ெபான்னமராவதியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்