×

தேனி மாவட்டத்தில் இன்று 784 மையங்களில் போலியோ முகாம்

தேனி, ஜன. 19: தேனி மாவட்டத்தில் இன்று 784 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.நாடு முழுவதும் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று (19ம்தேதி) நடக்க உள்ளது. இதில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட உள்ளது. தேனி மாவட்டத்தில் 17 ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும், 98 ஆரம்ப சுகதார நிலையங்களிலும், 13 தனியார் மருத்துவமனைகளிலும், 66 பள்ளிகளிலும், 498 சத்துணவு மையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களிலும், 9 கிராமச்சாவடிகளிலும், மற்றும் 83 பொது இடங்களிலுமாக மொத்தம் 784 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் அமைக்கப்பட உள்ளது.

இது தவிர அனைத்து பஸ்நிலையங்கள், சோதனைச்சாவடிகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் மார்க்கெட் பகுதிகள் என 34 இடங்களிலும், அகதிகள் முகாம்கள், நரிக்குறவர் தங்குமிடங்கள், கட்டுமானப்பணிகள் நடக்கும் இடங்கள், செங்கல்சூளைகள் என 12 இடங்களிலுமாக மொத்தம் 46 இடங்களிலும் போலியோ சொட்டு மருந்து முகாம் அமைக்கப்பட்டுள்ளது.இதற்காக சுகாதாரம் மற்றும் மருத்துவத்துறையில் 334, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் சமூகநலத்துறையில் இருந்து 1563 பேர், கல்வித் துறையில் 11 பேர், பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த பல்வேறு மாணவர் அமைப்புகளை சேர்ந்த 88 பேர், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்த 171 பேர், இதர பணியாளர்கள் 1156 பேர் மேற்பார்வையாளர்கள் 104 பேர் மற்றம் மாவட்ட அளவிலான மேற்பார்வை குழுவில் 6 பேர் பணியில் ஈடுபட உள்ளனர்.

இதுதவிர நடமாடும் சொட்டு மருந்து மையங்களில் 48 பேரும், அனைத்து பஸ்நிலையங்கள், சோதனைச்சாவடிகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் மார்க்கெட் பகுதிகள் 136 பேர் என மொத்தம் 3 ஆயிரத்து 323 பேர் பணியில் ஈடுபட உள்ளனர். இதற்காக 27 சுகாதாரத்துறை வாகனங்கள், 42 பிற துறை வாகனங்கள் போலியோ சொட்டு மருந்து முகாம்களில் ஈடுபடுத்தப்பட உள்ளது.

Tags : Polio camp ,centers ,Theni district ,
× RELATED வெளிமாநில வரத்து அதிகரிப்பு வருசநாட்டில் தேங்கும் தேங்காய்கள்