உள்ளாட்சி அமைப்புகள் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் பாதயாத்திரை பக்தர்கள் கோரிக்கை

சிங்கம்புணரி, ஜன. 19: காரைக்குடி, தேவகோட்டை உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் சிங்கம்புணரி வழியாக பழநி தைப்பூச விழாவிற்கு பாதயாத்திரையாக செல்வது வழக்கம்.அடுத்த மாதம் பிப்.8ம் தேதி தைப்பூசம் வரவுள்ள நிலையில் புத்தாண்டு முதலே பக்தர்கள் பாதயாத்திரையை துவங்கியள்ளனர்.தற்போது மயில் காவடி, சேவல் காவடி, வேல் காவடி உள்ளிட்டவற்றை ஏந்தி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிங்கம்புணரி வழியாக பழநிக்கு பாதயாத்திரையாக செல்கின்றனர். தற்போது உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்து மக்கள் பிதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் பாதயாத்திரை பக்தர்களுக்கு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் குடிநீர், கழிப்பறை, ஓய்வு நிழற்கூரை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Pilgrimage pilgrims ,bodies ,facilities ,
× RELATED கழிவுநீர் மேலாண்மையில் தமிழக...