குழந்தைகளுக்கெதிராககுற்றங்கள் நடக்கிறதா?1098 இலவச எண்ணுக்கு போன் செய்யுங்க

சிவகங்கை, ஜன. 19: சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: பெண் குழந்தைகள் தங்களுக்கு ஏற்படும் இன்னல்களை யாரிடம் தெரிவிப்பது என்று தெரியாமல் தவிக்கும் நிலையை மாற்றிடவும், போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாவட்ட அளவில் பல்வேறு துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.அதன் தொடர்ச்சியாக, பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் குற்றங்களை தடுத்திட புதிதாக இலவச 1098 தொலைபேசி சேவை சிவகங்கை மாவட்டத்தில் தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க கட்டணம் ஏதுமில்லை. பெண் குழந்தைகள் கல்வியை முழு அளவில் பெறுவதற்கு தேவையான வழிகாட்டுதல் மற்றும் மனதளவில் ஏற்படும் பிரச்னைகளை தீர்த்து வைத்தல் மற்றும் குழந்தைத் திருமணங்களை தடை செய்தல், பாலியல் தொடர்பான புகார்களை இதில் தெரிவிக்கலாம்.புகார்கள் தெரிவிப்பவர்கள் குறித்தும், பாதிப்பு அடைந்தவர்கள் குறித்தும் ரகசியம் காக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும். இதில் தகவல் தெரிவிக்க அச்சப்பட தேவையில்லை. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவுக்கு பிரதமர் மோடிக்கு மட்டும் அழைப்பு