பழநியில் பறவை காவடி எடுத்து பக்தர்கள் வழிபாடு

பழநி, ஜன. 19: தொடர் விடுமுறையின் எதிரொலியாக பழநி வந்த பக்தர்கள் பறவை காவடி எடுத்து வழிபாடு செய்தனர்.அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக விளங்குவது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இங்கு கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று தைப்பூசம். இவ்விழா வரும் பிப். 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. எனினும், பொங்கல் பண்டிகைக்காக விடப்பட்ட 5 நாள் தொடர் விடுமுறையின் காரணமாக ஏராளமான பக்தர்கள் தற்போது பழநி கோயிலுக்கு பாதயாத்திரையாக வந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் நேற்று மதுரையைச் சேர்ந்த பக்தர்கள் பறவைக்காவடி எடுத்து வழிபாடு செய்தனர். கிரிவீதிகளில் உலா வந்த இவர்கள் பறவைக்காவடியுடன் அலகுக்குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் ஏராளமான பக்தர்கள் ஸ்டார் காவடி எடுத்தும், மயில் காவடி எடுத்தும் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.

Related Stories: