×

ரயில் நிலையத்தில் - ஓடும் ரயிலில் கடத்தப்படும் - பிச்சை எடுக்கும் குழந்தைகள் குறித்து தெரிவிக்கலாம்

மதுரை, ஜன.19:  குழந்தைகளை ரயிலில் பிச்சை எடுக்க வைப்பவர்கள் மற்றும் கடத்திச் செல்பவர்கள் குறித்து தகவல் கிடைத்தால், உடனே தெரிவிக்கும்படி ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.   மதுரை ரயில் நிலையத்தில், குழந்தைகளுக்கான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு புறப்பட்டுச் செல்லும்  மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து மதுரை வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் மற்றும் பயணி கள் ரயில்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்களில் குழந்தைகள் குறிப்பாக சிறுமிகள் வலுக்கட்டாயமாக கூட்டிச் செல்லப்படுகின்றனரா? அல்லது கடத்திச் செல்லப் படுகின்றனரா? மற்றும் பிச்சை எடுக்கும் குழந்தைகளையும், சாதாரண உடையில் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

சிறுமிகள் மற்றும் குழந்தைகளை யாராவது வலுக்கட்டாயமாக கூட்டிச் செல்லவது போலவோ அல்லது ரயில்  நிலையத்திலோ, ஓடும் ரயிலிலோ குழந்தை களை வைத்து பிச்சை எடுக்க வைக்கும் மர்மக் கும்பல் குறித்து தகவல் தெரிந்தாலோ அல்லது குழந்தைகள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பது போல் தெரிந்தாலோ, அல்லது எந்த விதத்திலும் சந்தேகம் ஏற்பட்டாலோ அதுகுறித்த தகவலை உடனே தெரிவிக்க வேண்டும். மதுரை இருப்புப்பாதை காவல் நிலையத்தையோ(9498101988), சைல்டு லைன் (1098) அமைப்பையோ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இதன்மூலம் பாதிப்புக்குள்ளான குழந்தைகளை காப்பாற்ற முடியும். இத்தகவலை ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர். 

Tags : train station ,children ,
× RELATED பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம்...