திருத்தணி அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்து பசுமாடு படுகாயம்

திருத்தணி, ஜன. 19: திருத்தணி அடுத்த ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் யசோதம்மாள். இவர், தனக்கு சொந்தமான பசு மாடுகளை மேய்க்க நேற்று காலை அங்குள்ள ஏரி பகுதிக்கு ஓட்டிச் சென்றார். ஏரி அருகே மேய்ந்து கொண்டிருந்த பசு மாடு ஒன்று, அங்கு உருளை வடிவத்தில் சிறிதாக கிடந்த ஒரு பொருளை கடித்து சாப்பிட முயன்றுள்ளது. அப்போது அது வெடித்து   வாய்பகுதி மற்றும் நாக்கு பலத்த காயம் அடைந்தது. ரத்தம் கொட்டியது.

இதை பார்த்து பதறிய யசோதா கே.ஜி.கண்டிகையில் இருந்து கால்நடை மருத்துவரை அழைத்து வந்து பசு மாட்டிற்கு முதலுதவி சிகிச்சை அளித்தார்.  
பன்றிகளை கொன்று பிடிப்பதற்கு இருளர்கள் நாட்டுவெடி குண்டு வைத்திருக்கலாம். அது வெடித்ததில் பசுமாடு காயம் அடைந்திருக்கலாம் என அப்பகுதியினர் தெரிவித்தனர்.   இது குறித்த புகாரின்பேரில் திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Thiruthani ,
× RELATED ஊத்துக்கோட்டையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி