பூந்தமல்லி அருகே கோயில் குளத்தில் செத்து மிதந்த மீன்கள்

பூந்தமல்லி, ஜன.19: பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட, பாப்பான் சத்திரம் பகுதியில் மிகப் பழமையான காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இந்த கோயிலை ஒட்டி கோயிலுக்கு சொந்தமான குளம் உள்ளது.  சமீபத்தில் பெய்த மழையால் குளம் முழுவதுமாக நிரம்பியது. மேலும் இந்த குளத்தில் ஏராளமான மீன்கள் வளர்ந்து வந்தன.  இந்த நிலையில் கடந்த 2 தினங்களாக இந்த குளத்தில் உள்ள மீன்கள் கூட்டம், கூட்டமாக செத்து மிதந்து வருகின்றன.
 இதனால் அந்தப் பகுதியில் மிகுந்த துர்நாற்றம் வீசுவதோடு, தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

Tags : temple pond ,Poonthamalli ,
× RELATED கோயில் குளத்தில் வாலிபர் சடலம் மீட்பு