×

அறிவியல் செயல்திட்டம் போட்டியில் மாநில அளவில் 3ம் இடம் பிடித்த காஞ்சி அரசு பள்ளி மாணவன்: மலேசிய பயணத்துக்கு தேர்வு

காஞ்சிபுரம், ஜன.19: அறிவியல் செயல்திட்டம் போட்டியில் காஞ்சிபுரம் அரசு பள்ளி மாணவன், மாநில அளவில் 3ம் இடம் பிடித்தார். இதையொட் அவர்,  மலேசிய பயணதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனம், சேலம் சக்தி கைலாஷ் கல்லூரி நிர்வாகம், சேலம் மனநிறைவு மையம் ஆகியவை இணைந்து சமுதாயத்திற்கு பயன்தரும் அறிவியல் செயல்திட்டம் சமர்ப்பித்தல் போட்டி நடத்தியது. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த அங்கம்பாக்கம் அரசு பள்ளி மாணவன் 3ம் இடம் பெற்று மலேசியாவில் நடக்கும் அறிவியல் சார்ந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சேலத்தில் நடந்த இறுதிப்போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து அரசு பள்ளி, சிபிஎஸ்சி, மெட்ரிக், தனியார் பள்ளிகளை சேர்ந்த 150  மாணவர்கள் பங்கேற்றனர். இந்த போட்டியில் காஞ்சிபுரம் ஒன்றியம் அங்கம்பாக்கம் பள்ளியின் 8ம் வகுப்பு  மாணவன் தருண்பிரசாத் மாநில அளவில் 8ம் இடத்தை பெற்றார்.இதற்குப் பரிசாக மாணவர் தருண்குமார் மலேசியா நாட்டில் நடைபெறவுள்ள அறிவியல் சார்ந்த நிகழ்ச்சியில் பங்கேற்பற்கான சுற்று பயணம் அழைத்து செல்லப்பட உள்ளார்.
இந்நிகழ்ச்சியில் அங்கம்பாக்கம் அரசு பள்ளி அறிவியல் ஆசிரியர் தி.சேகர், காவாந்தண்டலம் பள்ளி ஆசிரியர் சரவணன், தேசிய விருது பெற்ற ஆசிரியர்கள் அன்பழகன், திலீப், பள்ளி மாணவர் பாலபிரகாஷ் ஆகியோர் பங்கேற்றனர். தமிழகத்தின் அனைத்து மண்டலங்களிலும் நடந்த இந்த நிகழ்ச்சியின் முதற்கட்ட போட்டியில் 255 பள்ளிகளில் இருந்து 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Kanchi Public School Student in Science Project Competition: State University ,
× RELATED செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதியில் 9...