×

போலீசார் பாரம்பரிய உடை அணிந்து காவல் நிலையத்தில்

சமத்துவப் பொங்கல்: எஸ்பி கண்ணன் பங்கேற்பு
செங்கல்பட்டு, ஜன. 19: செங்கல்பட்டு காவல் நிலையத்தில், சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில், எஸ்பி கண்ணன் கலந்து கொண்டார்.
செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில், சமத்துவ பொங்கல் விழா செங்கல்பட்டு டவுன் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் வேட்டி, சட்டை அணிந்து தனது குடும்பத்தினரோடு பொங்கல் விழாவில் பங்கேற்றார்.

செங்கல்பட்டு மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் போலீசார், புதுப்பானையில் பொங்கல் வைத்தனர். இந்த சமத்துவ பொங்கல் விழாவில் இஸ்லாமியர்கள், கிருத்துவர்கள், இந்து தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். அனைத்து பொதுமக்கள், காவலர்கள், மதத் தலைவர்களுக்கு எஸ்பி கண்ணன் சர்க்கரை பொங்கல் வழங்கினார்.இதில் டிஎஸ்பி கந்தன், இன்ஸ்பெக்டர்கள் டவுன் அந்தோணி ஸ்டாலின், தாலுகா அலெக்சாண்டர், அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் மற்றும் ஆண் காவலர்கள் பாரம்பரிய உடையான வேட்டி, சேலை அணிந்து பொங்கல் விழாவில் பங்கேற்றனர்.

Tags : police station ,
× RELATED வெறுப்பு பேச்சு: பிரதமர் மோடி மீது...