ஏரியில் மூழ்கி சிறுமி பரிதாப பலி: செய்யூர் அருகே சோகம்

செய்யூர், ஜன. 19: பவுஞ்சூர் அருகே ஏரிக்கரையோரம் விளையாடி கொண்டிருந்த சிறுமி ஏரியில் மூழ்கி பரிதாபமாக இறந்தாள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. செய்யூர் தேவராஜபுரத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார். இவரது மனைவி தமிழ்ச்செல்வி. இவர்களது மகள் டார்த்திகா (6). இவர்கள், தமிழ்ச்செல்வியின் சொந்த ஊரான பவுஞ்சூர் அருகே திருவாரூரில் வசிக்கின்றனர். இவர்களின் வீட்டின் சிறிது தூரத்தில் ஏரி அமைந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 16ம் தேதி மதியம் சிறுமி டார்த்திகா ஏரிக்கரை பகுதியில் விளையாடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவள், வீடு திரும்பாததால் பெற்றோர் சிறுமியை தேடி ஏரிக்கரை பகுதிக்கு சென்றபோது, தண்ணீரில் சடலமாக மிதப்பதை கண்டு கதறி அழுதனர். தகவலறிந்து அணைக்கட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு விசாரிக்கின்றனர்.

Tags : lake ,tragedy ,Cheyyur ,
× RELATED சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்