மனநல மருத்துவமனையில் நோயாளியின் உறவினரை சரமாரியாக தாக்கிய வார்டன்: போலீஸ் விசாரணை

பெரம்பூர்: மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தம்பியை பார்க்க வந்த அண்ணனை சரமாரி தாக்கிய மருத்துவமனை வார்டன் மற்றும் ஊழியர்களிடம்  போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னை அமைந்தகரையை சேர்ந்தவர் லோகநாதன் (30). இவர் தி.நகரில் உள்ள பிரபல தனியார் நகை கடையில் வேலை செய்து வருகிறார். இவருடைய தம்பி நாகராஜ் கடந்த 45 நாட்களுக்கு முன்பு அயனாவரம் மனநல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு லோகநாதன் தனது தம்பியை பார்க்க மருத்துவமனைக்கு  சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த வார்டன் மற்றும் அவருடன் இருந்த மூன்று பேர் லோகநாதனை உள்ளே அனுமதிக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில், வார்டன் மற்றும் அவருடன் இந்த மூன்று பேர் லோகநாதனை கடுமையாக தாக்கியுள்ளனர்.  இதில் லோகநாதன் கன்னம் மற்றும் உதடு  கிழிந்து ரத்தம் கொட்டி உள்ளது. அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
உதட்டில் 10 தையல்கள் போடப்பட்ட நிலையில் லோகநாதன்,  இதுகுறித்து தலைமைச் செயலக போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Warden ,patient ,police investigation ,hospital ,
× RELATED நோயாளி இல்லாமல் விதிமுறை மீறி வந்த ஆம்புலன்சுக்கு அபராதம்