இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் திருடிய 2 பேருக்கு வலை

சென்னை: கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பகுதியில் இரவு நேரங்களில் வீட்டின் வெளியில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களில் மர்ம நபர்கள் தொடர்ந்து பெட்ரோல் திருடுவதாக அசோக்நகர் காவல் நிலையத்திற்கு புகார்கள் வந்தன. அதன்பேரில், நேற்று முன்தினம் இரவு அசோக்நகர் போலீசார், மேற்கண்ட பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனத்தில் 2 மர்ம நபர்கள் பெட்ரோலை திருடிக் கொண்டிருந்தனர்.

 இவர்கள், போலீசாரை பார்த்ததும் தங்களது இருசக்கர வாகனத்தில் தப்பிக்க முயன்றனர். அதற்குள், போலீசார் விரைந்து அவர்களை நெருங்கியதால், தங்களது பைக்கை அங்கேயே போட்டுவிட்டு, குறுகிய சந்து வழியாக தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்து, திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED குழாய் வழியாக பெட்ரோல், டீசல் கொண்டு...