×

போதைப்பொருள் விற்ற தம்பதி கைது

சென்னை: காசிமேடு காசிபுரத்தில் போதைப்பொருள் பதுக்கி விற்பனை செய்த  காசிபுரம், ஏ-பிளாக் பகுதியை சேர்ந்த நீலாவதி (58), அவரது கணவர் ஆறுமுகம் (60) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
* பழைய வண்ணாரப்பேட்டை அஜித் முகமது கவுஸ் சாலையை சேர்ந்த கல்லூரி மாணவி ஷிபாயா (17) நேற்று வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானா அருகில் நடந்து சென்றபோது, பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள்,  இவரது செல்போனை பறித்துக்கொண்டு தப்பினர்.
* அசாம் மாநிலத்தை சேர்ந்த உதுப்தி தெங்கல் (20) என்பவர், சென்னை காரப்பாக்கம் பகுதியில் தங்கி, ஐ.டி. நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார். கடந்த 13ம் தேதி இவரை வழிமறித்து கத்தி முனையில் செல்போன் மற்றும் ₹4 ஆயிரத்தை பறித்து சென்ற செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பை சேர்ந்த சுரேஷ் (24), சிவா (23), விக்னேஷ் (23) ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
* பூந்தமல்லி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், முருகவேல் (36) என்பவருக்கு சொந்தமான மளிகை கடையின் மேற்கூரை ஓட்டை பிரித்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், சிகரெட், பீடி கட்டுகள், ₹7 ஆயிரத்தை திருடி சென்றனர்.
* கோயம்பேடு சீனிவாச நகர் 2வது தெருவில் உள்ள ஸ்ரீசித்திபுத்தி விநாயகர் கோயில் உண்டியலை உடைத்த மர்ம நபர்கள், அதிலிருந்த காணிக்கை பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
* கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த சாமுவேல் (22) என்பவரை தாக்கி பணம் பறிக்க முயன்ற டிரஸ்ட்புரத்தை சேர்ந்த கார்த்திக், ஐயப்பன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
* எம்ஜிஆர் நகர் சூளைப்பள்ளம் பகுதியை சேர்ந்த தமிழ்செல்வி (29), நேற்று அதே பகுதியில் நடந்து சென்றபோது, பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள், அவர் அணிந்திருந்த 5 சவரன் செயினை பறித்துக் கொண்டு தப்பினர்.
* எழும்பூர் ரயில்வே குடியிருப்பு பி.எச். சாலையை சேர்ந்த கணேசன் (46), எழும்பூர் பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்றபோது, பைக்கில் வந்த 3 மர்ம நபர்கள், சரமாரி தாக்கி அவரிடம் இருந்த ₹2500 மற்றும் விலை உயர்ந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பினர்.
* வில்லிவாக்கம் அடுத்த ராஜமங்கலம் தாதங்குப்பத்தை சேர்ந்த சங்கர் என்பவரின் வீட்டில் ஒரு பைக், அதே பகுதியை சேர்ந்த கமல் என்பவரின் வீட்டில் ஒரு லேப்டாப், ஒரு செல்போன், ₹10 ஆயிரம், தேவி கருமாரியம்மன் கோயில் உண்டியலை உடைத்து ₹14 ஆயிரம் ஆகியவற்றை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதேபால், சுரேஷ் மற்றும் சித்ரா ஆகியோரின் வீடுகளில் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். ஆனால், முடியாததால் தப்பி சென்றுள்ளனர்.
* சேலம் மாவட்டத்தை சேர்ந்த லட்சுமணன் (18), நேற்று அதிகாலை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து ஆட்டோ ஒன்றில் வடபழனி நோக்கி சென்று கொண்டிருந்தார். ஜெய்நகர் பார்க் அருகே சென்றபோது, அங்கு நின்றிருந்த 3 பேர், ஆட்டோவை வழிமறித்து, கத்தி முனையில், லட்சுமணன் பையில் இருந்த 3,500 ரூபாயை பறித்து சென்றனர்.

Tags :
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...