குழாய் அடைப்பு காரணமாக குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தேக்கம்: பொதுமக்கள் தவிப்பு

தண்டையார்பேட்டை: சென்னை மாநகராட்சி, 4வது மண்டலம், 40வது வார்டுக்கு உட்பட்ட திருவொற்றியூர் நெடுஞ்சாலையில்  தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு, 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்  வசித்து வருகின்றனர். தற்போது திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மெட்ரோ ரயில் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக இந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல், மேற்கண்ட அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குழாயை  மெட்ரோ ரயில் பணி காரணமாக ஊழியர்கள் தற்காலிகமாக அடைத்து வைத்து உள்ளனர். இதனால், கழிவுநீர் வெளியேற முடியாமல் குடியிருப்பு வளாகம் மற்றும் சாலைகளில் தேங்கி நிற்கிறது.

இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் குடியிருப்புவாசிகள் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. சாலையில் குளம் போல் கழிவுநீர் தேங்குவதால் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகரித்து வருகிறது. இதனால், இப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மாநகராட்சி குடிநீர் வாரியம் மற்றும் மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் இதுகுறித்து நேரில் பார்வையிட்டு, சாலையில் கழிவுநீர் தேங்குவதை தடுக்கவும், கழிவுநீர் முறையாக வெளியேறவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என இப்பகுி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: