×

வளர்ச்சி மற்றும் நிர்வாக வசதிக்காக அணைக்கட்டு, ஒடுக்கத்தூரை 2 ஒன்றியமாக மாற்ற வேண்டும்

அணைக்கட்டு, ஜன. 14: வளர்ச்சி மற்றும் நிர்வாக வசதிக்காக அணைக்கட்டு, ஒடுக்கத்தூரை 2 ஒன்றியமாக மாற்ற வேண்டும் என விவசாயிகள் குறைத்தீர்வு கூட்டத்தில் மனு அளித்தனர்.  அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் தாசில்தார் முரளிகுமார் தலைமையில் நேற்று நடந்தது. பிடிஒக்கள் வின்சென்ட்ரமேஷ்பாபு, அமுதவள்ளி முன்னிலை வகித்தனர். மண்டல துணை தாசில்தார் மெர்லின்ஜோதிகா வரவேற்றார். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது: தற்போது புது, புது காய்ச்சல் வருகிறது, இதுபோன்ற காய்ச்சல்களுக்கு தனியார் மருத்துவமனையில் சேர்த்தால் குணமாக லட்ச கணக்கில் பணம் செலவாகிறது, மருத்துவ காப்பீடுகளும் இதற்கு பொருந்துவதில்லை, இதனால் முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கும்விதமாக மாற்றியமைக்க வேண்டும்.

மேலும், வனப்பகுதிகளில் உள்ள இந்து கோயில்களின் மேற்கூரைகளை வனத்துறையினர் அத்துமீறி அகற்றுவதை நிறுத்த வேண்டும், எருதுவிடும் விழா பாதுகாப்பிற்கு வரும் போலீசார் கிராம மக்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கை என கூறி அத்துமீறுவதை தவிர்க்க வேண்டும், வளர்ச்சி பணி மற்றும் நிர்வாக வசதிக்காக அணைக்கட்டு, ஒடுகத்தூர் இரண்டு ஒன்றியமாக மாற்ற வேண்டும். நேமந்தபுரம் ஊராட்சியில் வேளாண், தோட்டகலை துறை எந்த திட்டங்களையும் தெரியபடுத்துவதில்லை, இதனால் நாங்கள் விவசாயம் செய்ய முடியாமல் இருந்து வருகிறோம், பயிர் காப்பீடு செய்திருந்தும், சேதமான பயிர்களுக்கு இதுவரை காப்பீடு தொகை வழங்கவில்லை, இதனால் பயிரிட வாங்கிய கடனை அடைக்க முடியாமல் அவதிபட்டு வருகிறோம்.

அணைக்கட்டு வேளாண்துறை சார்பில் சொட்டுநீர் பாசன திட்டத்திற்காக பைப்புகள் வரவழைக்கப்பட்டு 6 மாதமாகியும் நிலத்தில் பொருத்தாததால் செடிகள் காய்ந்து வருகிறது, உடனடியாக பொருத்த கோரி வேளாண், தோட்டகலை துறையிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கையில்லை. தற்போது திருவலம் சக்கரை ஆலை மட்டுமே செயல்படுவதால் நாங்கள் விளைவிக்கும் கரும்புகளை திருவலம் சகக்கரை ஆலைக்கே அனுப்ப வேண்டிய நிலை உள்ளது, இதற்கு லாரி வாடகைக்கே அதிக பணம் செலவாகிறது, இயங்கி கொண்டிருந்த கரும்பு அறவை ஆலைகள் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினர்,

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு கூட்டத்தில் பங்கேற்ற அரசு அலுவலர்கள் விளக்கம் அளித்தனர், முடிவில் தாசில்தார் முரளிகுமார் பேசுகையில், இந்த குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வைத்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். இவ்வாறு பேசினர்.

Tags : facility ,
× RELATED பிரதமர் வீட்டு வசதி திட்ட முறைகேடு: அறிக்கை தர ஐகோர்ட் ஆணை