ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஓமன் நாட்டு மன்னர் மறைவையொட்டி அரை கம்பத்தில் பறந்த தேசியக்கொடி

வேலூர், ஜன.14: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஓமன் நாட்டு மன்னர் மறைவையொட்டி அரை கம்பத்தில் தேசியகொடி பறக்கவிட்டு நேற்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்பட்டது. ஓமன் நாட்டு மன்னர் சுல்தான் கபூஸ் பின் சையது அல் சையது உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் மரணமடைந்தார். இவர் ஓமன் நாட்டில் அரை நூற்றாண்டு காலம் ஆட்சி நடத்தியவர். இதனையொட்டி இந்தியாவில் துக்கம் அனுசரிக்கும் விதமாக தேசிய கொடி நேற்று ஒரு நாள் அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.

அதேபோல் தமிழகத்தில், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஓமன் நாட்டு மன்னர் மறைவையொட்டி துக்கம் அனுசரிக்கும் விதமாக கோட்டை கொத்தளம், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள், எஸ்பி அலுவலகங்கள் ஆகிய இடங்களில் தேசியக்கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.

Related Stories: