ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நூறு நாள் வேலை திட்டத்தில் ₹239 கோடி முறைகேடு

வேலூர், ஜன.14: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நூறு நாள் வேலை திட்டத்தில் ₹239 கோடி முறைகேடு நடந்துள்ளதாக மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் புகார் அளிக்கப்பட்டது. வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் டிஆர்ஓ பார்த்தீபன் தலைமையில் நேற்று நடந்தது. அதிகாரிகள் பங்கேற்று மனுக்களை பெற்றனர். அப்போது காட்பாடி எம்ஜிஆர் நகரை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

நாங்கள் இந்து அறநிலைய துறைக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வருகின்றோம். எங்களுக்கு மாற்று இடம் வேறு எதுவும் கிடையாது. தற்போது இந்து அறநிலையத்துறையின் மூலமாக நாங்கள் வசித்து வரும் எங்கள் வீட்டினை காலி செய்யுமாறு கடிதம் அனுப்பி உள்ளனர். அதனை தடுத்து நிறுத்தியும், பிற்படுத்தப்பட்ட நலத்துறை மூலமாக இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

Related Stories: