திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு சிறப்பு முகாம் நிறைவு

திருவண்ணாமலை, ஜன.14: திருவண்ணாமலை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம் செய்வதற்கான 2வது கட்டமாக 2,372 மையங்களில் நடைபெற்ற சிறப்பு முகாம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் 23ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் வாக்காளர்களின் பெயர், முகவரி திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட மாற்றங்கள் செய்வதற்கான சிறப்பு முகாம்கள் ஜனவரி 4, 5ம் தேதிகளில் முதல் கட்டமாகவும், ஜனவரி 11, 12ம் தேதிகளில் 2வது கட்டமாக தமிழகம் முழுவதும் அனைத்து வாக்குச்சாடி மையங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 2,372 மையங்களில் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், முகவரி திருத்தம் மற்றும் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் முதல் கட்டமாக கடந்த வாரம் நடந்தது.

அதைத்தொடர்ந்து, 2வது கட்டமாக கடந்த 12ம் தேதி மற்றும் நேற்று முன்தினம் என 2 நாட்கள் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் திருத்தம், முகவரி மாற்றம், புதியதாக பெயர் சேர்த்தல் போன்ற படிவங்களை பெற்று அதை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். திருவண்ணணாலை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால் பெரும்பாலான மையங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

Tags : camp ,Thiruvannamalai ,district ,
× RELATED வேலை வாய்ப்பு முகாம்