கலசப்பாக்கம் அருகே அதிகாலை அரசு பஸ் மீது லாரி மோதல் சிறுமி உட்பட 3 பேர் காயம்

கலசபாக்கம், ஜன.14: கலசப்பாக்கம் அருகே அரசு பஸ் மீது லாரி மோதியதில் சிறுமி உட்பட 3 பேர் காயமடைந்தனர். கலசபாக்கம் அருகே போளூர்- செங்கம் செல்லும் சாலையில் தாமரைப்பாக்கம் பஸ் நிறுத்துமிடம் உள்ளது. நேற்று அதிகாலை 4.45 மணியளவில் இப்பகுதியில் இருந்து போளூர் செல்லும் அரசு டவுன்பஸ் ஒன்று தாமரைப்பாக்கம் பஸ் நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்தது.

அப்போது, அவ்வழியாக வந்த லாரி, இந்த பஸ் மீது மோதியது. இந்த விபத்தில் பஸ்சில் இருந்த தாமரைப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த செந்தாமரை(56), பூவாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தேவி(32), மேல்வன்னியனூர் கிராமத்தைச் சேர்ந்த ஹசினா(8) ஆகிய 3 பேர் காயமடைந்தனர். இதைப்பார்த்த அப்பகுதியினர் காயமடைந்தவர்களை மீட்டு கடலாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, கடலாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : lorry collision ,Kalappakkam ,
× RELATED லாரி மோதி உயிரிழந்த எலக்ட்ரீசியன்...