திருவண்ணாமலை அருகே மொபட் மீது பஸ் மோதி ஒருவர் படுகாயம்

திருவண்ணாமலை, ஜன.14: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள செத்தவாரை கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன்(50) விவசாயி. இவர் நேற்று முன்தினம் தனது மொபட்டில் சொந்த வேலையாக கண்ணப்பந்தல் கூட்ரோட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு சென்றார். அப்போது, எதிரே திருக்கோவிலூர் மார்கமாக இருந்து வந்த தனியார் பஸ் ஒன்று எதிர்பாரத விதமாக கிருஷ்ணன் மொபட் மீது மோதியது. இதில், கிருஷ்ணன் கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் காயமடைந்தவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கிருஷ்ணணின் மனைவி ராணி வெறையூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Thiruvannamalai ,
× RELATED திருவண்ணாமலை பேருந்து நிலையம் அருகே ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக்கொலை