சிவகங்கை, காரைக்குடியில் பள்ளி, கல்லூரிகளில் பொங்கல் விழா

காரைக்குடி, ஜன. 14: காரைக்குடி பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பொங்கல் விழா கொண்டாப்பட்டது. காரைக்குடி அருகே அரண்மனை சிறுவயல் விநாயகா கல்வியியல் கல்லூரி மற்றும் ஆரஞ்சு ட்ரீ நர்சிங் கல்லூரியில் பொங்கல் விழா நடந்தது. கல்வியியல் கல்லூரி முதல்வர் மோகனசுந்தரம் வரவேற்றார். கல்விகுழும தலைவர் டாக்டர் ரமேஷ் தலைமை வகித்தார். செயலாளர் டாக்டர் கவிதாரமேஷ் முன்னிலை வகித்து துவக்கி வைத்தார். அறங்காவலர் ராமையா உள்பட பலர் கலந்து கொண்டனர். கட்டுரை, பேச்சு, கோலப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டன. ஸ்ரீ ராஜராஜன் கல்விக்குழுமத்தை சேர்ந்த ஸ்ரீராஜராஜன் பொறியியல் கல்லூரி, இருபாலர் கல்வியியல் கல்லூரி, சிபிஎஸ்இ பள்ளி சார்பில் நடந்த விழாவிற்கு அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் சுப்பையா தலைமை வகித்தார். நியூயார்க்கில் உள்ள அர்னாட் ஆக்டன் மெடிக்கல் சென்டர் லேபாராஸ்கோபிக் சர்ஜன் டாக்டர் சதாசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் மயில்வாகனன் நன்றி கூறினார்.

காரைக்குடி அருகே புதுவயல் கலைமகள் வித்யாலயா பள்ளியில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவிற்கு பள்ளி முதல்வர் பரமேஸ்வரன் தலைமை வகித்தார். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. காரைக்குடி மதர் சிறப்பு பள்ளியில் நடந்த விழாவிற்கு பள்ளி நிர்வாக இயக்குநர் அருண்குமார் தலைமை வகித்தார். மாநில, மாவட்ட அளவில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. கலைநிகழ்ச்சிகள் நடந்தன. விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்த விழாவிற்கு கல்லூரி முதல்வர் பாலமுருகன் வரவேற்றார். அறக்கட்டளை தலைவர் குமாரசாமி தலைமை வகித்தார். செயலாளர் சொக்கலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

ராகவேந்திரா பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி செயலாளர் கார்த்திக் தலைமை வகித்தார். பாராம்பரிய விளையாட்டு மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. காரைக்குடி எஸ்.ஆர் கல்வி நிறுவனங்களின் சார்பில் நடந்த விழாவிற்கு வழக்கறிஞர் அப்துல்சித்திக் தலைமை வகித்தார். கலைநிகழ்ச்சிகள் நடந்தன.   காரைக்குடி நேஷனல் பயர் அண்டு சேப்டி கல்லூரி, நேஷனல் கேட்டரிங் கல்லூரியில் நடந்த விழாவிற்கு கல்லூரி தாளாளர் சையது தலைமை வகித்தார். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

Tags : Pongal Festival ,Sivaganga ,Karaikudi School ,
× RELATED புனித லூர்தன்னை ஆலயத்தில் சமத்துவ பொங்கல் விழா