×

காளையார்கோவிலில் வாலிபால் போட்டி பயிற்சி நிறைவு

காளையார்கோவில், ஜன. 14:  காளையார்கோவிலில் சிவகங்கை மாவட்ட கால்பந்து கழகம் சார்பில் ஜூனியர் வாலிபால் பந்து அணி தேர்வு மாவட்ட ஆசிரியர் கல்வி- பயிற்சி நிறுவனத்தில் கடந்த ஜன.5ம் தேதி நடைபெற்றது. இதில் தேர்வு செய்யப்பட்ட 15 வீரர்களுக்கான 4 நாட்கள் (ஜன. 9- ஜன. 12) பயிற்சி முகாம் உணவு, தங்கும் வசதியுடன் நடைபெற்றது. பயிற்சி முகாமின் நிறைவு விழா நேற்று நடந்தது. சிவகங்கை மாவட்ட வாலிபால் கழக செயலர் ஜெயக்குமார், மாஸ்டர் ஸ்போர்ட்ஸ் கிளப் செயலர் தெய்விக சேவியர், யுனைடெட் வாலிபால் கிளப் செயலர் முத்துக்குமார், சாம் யூத் ஸ்போர்ட்ஸ் கிளப் செயலர் ரூபினா, பயிற்சியாளர் வினோத்குமார், ஆசிரியர் பெஞ்சமின் ஆகியோர் கலந்து கொண்டு வீரர்களை பாராட்டினர். மேலும் திருவாரூரில் நடைபெறவுள்ள மாநில அளவிலான போட்டியில் சிறப்பாக விளையாடுமாறு வாழ்த்தி உற்சாகப்படுத்தினர்.

Tags : Volleyball Tournament ,Kaliyarikovil ,
× RELATED திருமுல்லைவாசலில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி