×

புத்தாக்க அறிவியல் ஆய்வு கண்காட்சியில் மாணவர்களின் படைப்புகள் குறைவு

விருதுநகர், ஜன. 14: தமிழ்நாடு அறிவியல் தொழிலநுட்ப மையம் சார்பில் விருதுகர் கேவிஎஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், மாவட்ட அளவிலான புத்தாக்க அறிவியல் ஆய்வு கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் பங்கேற்கும் 6 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், தங்களின் அறிவியல் படைப்புகளை உருவாக்க ரூ.10 ஆயிரம் ஒவ்வொருக்கும் வழங்கப்படுகிறது. இதன்படி மாவட்டத்தில் 55 மாணவர்களின் அறிவியல் படைப்புகள் கண்காட்சியில் வைத்திருந்தனர். கண்காட்சியை முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி துவக்கி வைத்தார். புதுடில்லி தேசிய புத்தாக்க அறிவியல் கட்டளை மெரின்டயானா, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய டேவிட் பொன்னுத்துரை சிறப்புரையாற்றினர். கண்காட்சியில் மழைநீர் சேகரிப்பு,  அணு மற்றும் அனல் மின்நிலைய மாதிரி, சோலார் சிட்டி, செயற்கை கோள், மூலிகை தாவரங்கள், தானியங்கி வேக கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்ட படைப்புகள் இடம் பெற்றிருந்தன.

அறிவியல் மையம் சார்பில் வழங்கப்பட்ட ரூ.10 ஆயிரம் முழுமையாக செலவிடப்படவில்லை.  55 மாணவர்களின் படைப்புகளில் இருந்து 11 படைப்புகளை தேர்வு செய்யப்பட்டு, மாநில அளவிலான கண்காட்சியில் இடம்பெற செய்ய 3 ஆசிரியர் குழுவினர் நியமனம் செய்யப்பட்டு இருந்தனர்.கடந்த ஆண்டுகளில் ‘இன்ஸ்பயர் அவார்ட்ஸ்’ கண்காட்சியில் 200 முதல் 300 படைப்புகள் இடம் பெறும். ஆனால், இம்முறை 55 படைப்புகள் மட்டும் இடம் பெற்றிருந்தன.
இது தொடர்பாக மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ராஜா கூறுகையில், ‘மாவட்டம் முழுவதும் 6 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் கண்காட்சியில் இடம்பெற 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் ஆன்லைனில் பதிவு செய்திருந்தனர். தேசிய அறிவியல் தொழில் நுட்ப குழுவினர் 55 பேரை மட்டும் தேர்வு செய்து வங்கி கணக்கில் பணம் செலுத்தி உள்ளனர். புதிய தேர்வு முறையால் பங்கேற்கும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது என்றார்.


Tags : New Science Research Exhibition ,
× RELATED செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சிக்கு...