×

16ம் தேதி டாஸ்மாக் லீவு

தேனி, ஜன. 14: திருவள்ளுவர் தினத்தையொட்டி வருகிற 16ம் தேதி டாஸ்மாக் மதுபானக் கடைகளை அடைக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசு திருவள்ளுவர் தினத்தையொட்டி டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அறிவித்து வருகிறது. இதன்படி, வருகிற 16ம் தேதி திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட உள்ளது. எனவே, வருகிற 16ம் தேதி தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகள், உரிமம் பெற்ற பார்களை அடைக்க மாவட்ட கலெக்டர் பல்லவிபல்தேவ் உத்தரவிட்டார்.

Tags : TASMAC ,
× RELATED 3 நாட்களுக்கு பிறகு திறப்பு டாஸ்மாக் மதுக்கடைகளில் குவிந்த மதுபிரியர்கள்