×

ஓமன் மன்னருக்கு அஞ்சலி அரைக்கம்பத்தில் பறந்த தேசியக்கொடி

தேனி, ஜன.14: ஓமன் நாட்டின் மன்னர் மரணம் அடைந்ததையடுத்து தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. அரபு நாடுகளில் ஒன்றான ஓமன் நாட்டின் மன்னராக கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி வகித்தவர் சுல்தான் காபூஸ் பின் சையித் அல் சையித். இவர் இந்தியாவில் கல்வி பயின்றவர். இந்திய ஜனாதிபதியாக இருந்த சங்கர்தயாள்சர்மாவின் மாணவராக இருந்தவர். இவர் ஆட்சிகாலத்தில் இந்தியாவுடன் நெருங்கிய நட்புறவுடன் இருந்தார். இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இயற்கை எய்தினார். இவரது இறப்பையடுத்து இந்தியாவில் துக்க தினம் அனுசரிக்க மத்திய அரசு அறிவித்தது. இதனையடுத்து நேற்று தேனி மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்பட அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு துக்க தினம் அனுசரிக்கப்பட்டது.

Tags : King ,Oman ,
× RELATED இது எனது 240வது சந்தோஷமான தோல்வி: தேர்தல் மன்னன் லகலக