செங்கல்பட்டு அரசு கலைக்கல்லூரியில் பொங்கல் விழா

செங்கல்பட்டு, ஜன. 14: செங்கல்பட்டு அரசு கலை கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். செங்கல்பட்டு அரசு கலைக் கல்லூரியில் தமிழ், வணிகவியல், வரலாறு, இயற்பியல், வேதியல் உள்ளிட்ட அனைத்து துறையின் சார்பில் பொங்கல் விழா நடந்தது.
கல்லூரி முதல்வர் சிதம்பர விநாயகம், துணை முதல்வர் கிள்ளிவளவன் ஆகியோர் விழாைவ துவக்கி வைத்தனர். தொடர்ந்து மாணவிகள் புதுப்பானையில் பொங்கல் வைத்து, ‘‘பொங்கலோ பொங்கல்’’ என்று உற்சாக கோஷமிட்டனர்.

பின்னர், மாடுகளுக்கு பொங்கல் வழங்கி மகிழ்ந்தனர். இதையடுத்து மயிலாட்டம், ஒயிலாட்டம், கிராமிய இசை உள்பட பாரம்பரிய விளையாட்டுக்கள் விளையாடினர். மாணவ, மாணவிகள் வேட்டி, சோலையுடன் வந்திருந்தனர். அனைவரும் தங்களுக்குள் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.இதேபோல் ஊரக வளர்ச்சித் துறை, வருவாய் துறை ஆகிய அரசு அலுவலகங்களிலும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

Tags : Pongal Festival ,Chengalpattu Government Art Gallery ,
× RELATED புனித லூர்தன்னை ஆலயத்தில் சமத்துவ பொங்கல் விழா