பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடைத் தெருவில் அலைமோதிய மக்கள் கூட்டம்

காஞ்சிபுரம், ஜன.14:  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காஞ்சிபுரம் காந்தி சாலை, ரங்கசாமி குளம் பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் காந்தி சாலை, மூங்கில் மண்டபம், ரங்கசாமி குளம் ரயில்வே சாலை ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.காஞ்சிபுரம், காந்தி சாலையில் பெரிய ஜவுளி நிறுவனங்கள், பட்டு கூட்டுறவு சங்கங்கள் உள்பட ஏராளமான கடைகள் உள்ளன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சாலையோரங்களில் ஏராளமான சிறு துணிக்கடைகளும் உருவாகியுள்ளன.இந்தக்கடைகளில் பெரும்பாலும் குழந்தைகளுக்கான ஆடைகளே அதிகம் உள்ளன. இந்த சாலையோர கடைகளில் விலை பெரிய ஜவுளி நிறுவனங்களின் விலையைக் காட்டிலும் குறைவு என்பதால் அனைத்து தரப்பு மக்களும், தங்களுக்கு தேவையான ஆடைகளை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ற குறைந்த விலையில் வாங்கி செல்கின்றனர்.

இதையொட்டி காஞ்சிபுரம், காந்தி சாலையில், வாகனங்களின் போக்குவரத்துள் அதிகரித்துள்ளன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கடந்த சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் என்றாலும், திங்கள்கிழமையான நேற்று போகிப் பொங்கலுக்கு முன்நாள் என்பதால் மாலையில் ஏராளமான பொதுமக்கள் காந்தி சாலையில் குவிந்தனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து 3 நாட்களுக்கு பரபரப்பான வியாபாரம் இருக்கும் என வியாபாரிகள் எதிர் பார்க்கின்றனர்.மேலும் ராஜாஜி மார்க்கெட் பகுதியில் பொங்கல் கரும்பு, மஞ்சள், மண்பானை உள்பட பொங்கல் பண்டிகைக்கான பொருள்கள் ஏராளமாக குவிந்துள்ளன. இதனை வாங்கவும் ஏராளமாக பொதுமக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டுகின்றனர்.

Tags : crowd ,street ,Pongal ,
× RELATED உடைந்து நாசமான சோலார் மின் தகடு