×

மீன்வள உதவியாளர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு

செங்கல்பட்டு, ஜன.14: செங்கல்பட்டு கலெக்டர் ஜான்லூயிஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு அரசு மீன்வளத் துறையில் காஞ்சிபுரம் மாவட்டம் (இருப்பு) நீலாங்கரை மீன்துறை உதவி இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டில் காலியாக உள்ள செங்கல்பட்டு மீன்துறை ஆய்வாளர் மற்றும் வாணியஞ்சாவடி மீன்துறை ஆய்வாளர் அலுவலகத்தில் காலியாக உள்ள 4 மீன்வள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பொது போட்டி (முன்னுரிமையற்றவர்) ஆதிதிராவிடர் (முன்னுரிமை பெற்றவர்) பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் (முன்னுரிமை பெற்றவர் ) மற்றும் பிற்படுத்தப்பட்டோர் (பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்கள் தவிர முன்னுரிமையற்றவர்கள்) பிரிவுகளில் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

தகுதிகள்: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும். மீன் துறையினரால் நடத்தப்படும் ஏதேனும் ஒரு மீனவர் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மீன்வள உதவியாளர் பதவிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு 1.01.2020 அன்று 35 வயதும் ஆதிதிராவிடர் 32, பிற்படுத்தப்பட்டோர் 30, மாற்றுதிறனாளிகளுக்கு 45 வயது வரம்புக்கு உட்பட்டு இருக்கவேண்டும்.தகுதியானவர்கள் தங்களது கல்வி சான்றிதழ், சாதிச்சான்றிதழ், குடும்ப அட்டை நகல், 2 புகைப்படங்கள் (பாஸ்போர்ட் சைஸ் போட்டோ) ஆகியவற்றுடன் வரும் பிப்ரவரி 10ம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: மீன்துறை இணை இயக்குநர் (மண்டலம்) சென்னை அலுவலகம், வளாகம் 3ம் தளம், தேனாம்பேட்டை, சென்னை-600 006 என கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில்...