போதைப்பொருட்கள் 1500 கிலோ பறிமுதல்

சென்னை, ஜன.14: பிராட்வே எம்.கே.கார்டன் பகுதியில் உள்ள ஒரு லாரி ஷெட்டில், போதை பொருட்கள் பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக எஸ்பிளனேடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் மேற்கண்ட ஷெட்டில் அதிரடி சோதனை நடத்தி 1500 கிலோ போதை பாக்குகளை பறிமுதல் செய்தனர்.  விசாரணையில் டெல்லி யில் இருந்து போதை பாக்குகளை கடத்தி வந்து பதுக்கியது  தெரிந்தது. இதுதொடர்பாக வழக்கு பதிந்து தலைமறைவாக உள்ள லாரி ஷெட் உரிமையாளர் ஆஷிஷை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED கூரியர் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு...