பழவேற்காடு கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி வாலிபர் பலி

பொன்னேரி, ஜன. 14: பொன்னேரி அடுத்த புதுவாயல் கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (25). பட்டதாரி. இவர், நேற்று முன்தினம் நண்பர்களுடன் பழவேற்காடு சென்றார். அங்கு ஏரி மற்றும் இயற்கை அழகை ரசித்துவிட்டு முகத்துவாரத்தில் விக்னேஷ் உள்பட அனைவரும் குளித்துள்ளனர். அப்போது,  ராட்சத அலையில் சிக்கிய அவர் மாயமானார். உடனே, அங்கிருந்த மீனவர்கள் உதவியுடன் விக்னேசை நண்பர்கள் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

தகவல் அறிந்ததும் திருப்பாலைவனம் காவல் நிலைய எஸ்ஐ சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். தேடுதல் வேட்டைக்கு பிறகு கடற்கரையில் ஒதுங்கிய விக்னேஷ் உடலை போலீசார் மீட்டு  பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags : giant wave ,sea ,Pulicat ,
× RELATED சீட் பிடிப்பதில் தகராறு ஓடும் ரயிலில் ஒருவர் அடித்துக்கொலை