பாண்லே பால் விற்பனை முகவர்கள் முற்றுகை

புதுச்சேரி, ஜன. 14: புதுவையில் உயர்த்தப்பட்ட கமிஷன் தொகையை கேட்டு பாண்லே பால் விற்பனை முகவர்கள் நேற்று முற்றுகையில் ஈடுபட்டனர். புதுவையில் பால் விற்கும் முகவர்களுக்கு உயர்த்தப்பட்ட கமிஷன் தொகையை  வழங்க வேண்டும். அதன் நிலுவை தொகையையும் பொங்கலுக்கு முன்பு கொடுக்க  வேண்டும் என்பதை வலியுறுத்தி மிஷன் வீதியில் உள்ள பாண்லே தலைமை அலுவலகத்தை  பாண்லே பால் விற்பனை (ஏஐடியுசி) முகவர்கள் நேற்று திடீரென  முற்றுகையிட்டனர்.

போராட்டத்துக்கு ஏஐடியுசி பொதுச்செயலாளர்  சேதுசெல்வம் தலைமை தாங்கினார். சங்க தலைவர் செல்வமணி, செயலாளர் முருகன்,  பொருளாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 25க்கும்  மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். அப்போது  தங்களுக்கு தீபாவளி கூப்பனையும் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென  பாண்லே பால் விற்பனை முகவர்கள் வலியுறுத்தினர்.

Related Stories: