பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை

நெய்வேலி, ஜன. 14: நெய்வேலி  மந்தாரக்குப்பம் என்.சி.வி நகரில் வசித்து வருபவர் டேவிட் செல்லையா. இவர் கங்கைகொண்டான் பேரூராட்சியின் பாமக நகர செயலாளராக உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனது நண்பர் ஒருவர் வீட்டுக்கு அவ்வப்போது சென்று வருவது வழக்கம். அப்போது நண்பரின் மகள் மந்தாரக்குப்பத்தில் உள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு  படித்து வரும் மாணவியை  வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் டேவிட் செல்லையா தனது நண்பர் மகளுக்கு  பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து குடும்பத்தினரிடம் தெரிவித்தால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார்.  இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறியுள்ளார். இதையடுத்து மாணவியரின் குடும்பத்தினர் மந்தாரக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

Advertising
Advertising

இதுகுறித்து மந்தாரக்குப்பம் போலீசார் டேவிட் செல்லையா மீது போக்ேசா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து டேவிட் செல்லையாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: