வத்தலக்குண்டு அருகே டூவீலர் மீது வேன் மோதி தனியார் ஊழியர் பலி

வத்தலக்குண்டு, ஜன. 14:  வத்தலக்குண்டு அருகே டூவீலர் மீது வேன் மோதியதில் தூத்துக்குடியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பலியானார். தூத்துக்குடியை சேர்ந்தவர் சபீக் (35). தனியார் நிறுவன ஊழியர். இவர் டூவீலரில் கொடைக்கானல் சென்று விட்டு நேற்று ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். வத்தலக்குண்டு- நிலக்கோட்டை சாலையில் நூத்தலாபுரம் பிரிவு அருகே வந்த போது எதிரே வந்த வேன் இவரது டூவீலர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சபீக் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : van crashes ,Wattalakundu ,
× RELATED அங்கன்வாடி பெண் ஊழியர் தற்கொலை