நிலக்கோட்டை யூனியனில் ஆலோசனை கூட்டம்

வத்தலக்குண்டு, ஜன. 14: நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கவுன்சிலர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ரெஜினா நாயகம் தலைமை வகிக்க, ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் யாகப்பன் முன்னிலை வகித்தார்.ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் லாரன்ஸ் வரவேற்று பேசினார். கூட்டத்தில் முதல் தீர்மானமாக நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags : meeting ,Nilakkottai Union ,
× RELATED ஏடிஜிபியாக பதவி உயர்வு மதுரை கமிஷனருக்கு பொதுமக்கள் பாராட்டு