×

தூத்துக்குடி மாவட்டத்தில் சமத்துவ பொங்கல் விழா

தூத்துக்குடி, ஜன.14: தூத்துக்குடி செல்சினி காலனியில் உள்ள டுவிங்கிள் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. இதனை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. பள்ளி தாளாளர் சுயம்புலிங்கம் தலைமை வகித்தார். முதல்வர் ஷீபாராணி முன்னிலை வகித்தார். ஆசிரியைகள், மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.தூத்துக்குடியில் 38வது வார்டு நண்பர்கள் குழு சார்பில் பொங்கலை முன்னிட்டு பெண்களுக்கான கோலப்போட்டி நடந்தது. இதற்கு சமூக ஆர்வலர் சுஜிதா தலைமை வகித்து கோலங்களை தேர்வு செய்தார். முன்னதாக போட்டிகளை மத்தியபாகம் எஸ்ஐ ரோடாபாய் ஜெயசித்ரா துவக்கி வைத்தார்.இதில் அங்குள்ள மேலூர் பங்களா தெரு, குமார்தெரு, பாகம்பிரியாள் தெரு, ஜெயலானி தெரு தொடர்ச்சி, தெற்கு சம்பந்த மூர்த்தி தெரு ஆகிய பகுதிகளில் வீடுகளின் முன்பு முன் அறிவிப்பின் பேரில் கோலங்கள் வரையப்பட்டிருந்தன. அதில் வெற்றிக்குரிய கோலங்கள் தேர்வு செய்யப்பட்டன.38 வது வட்ட அமமுக செயலாளர் ஷேக் மைதீன் முன்னிலை வகித்தார். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பொங்கல் விழாவில் பரிசுகள் வழங்கப்படுகின்றன. இந்நிகழ்ச்சியில் மத்தியபாகம் தலைமை காவலர் வைலட் ஆரோ, நண்பர்கள் குழு நிர்வாகிகள் முருகன், மூர்த்தி, செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி தூய மரியன்னை மகளிர் கல்லூரியில் பொங்கல் விழா கல்லூரி செயலாளர் புளோராமேரி தலைமையில் கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் லூசியா ரோஸ், துணை முதல்வர் ஷிபானா, சுயநிதிப்பிரிவு இயக்குநர் மேரி ஜாய்ஸ்பேபி, மரியன்னை சபை இல்லத்தலைவி மரியசாந்தி, தேர்வாணையர் ஆரோக்கியமேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன், பெரிநாயகிபுரம் விவசாயி கனி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு மாணவியர்களுடன் பொங்கல் இட்டு பொங்கல் விழாவினை கொண்டாடினர். மாணவியர்களின் கிராமிய கலைநிகழ்ச்சி நடந்தது.   கழுகுமலை: கழுகுமலை ஆர்.சி.சூசை மேல்நிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. விழாவிற்கு பள்ளி தாளாளர் மற்றும் தலைமையாசிரியர்  பிரிட்டோ பீட்டர் ராஜ் தலைமை வகித்தார். பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் தமிழ் கலாசாரத்தின் பாரம்பரிய உடை அணிந்து வந்து வகுப்பு வாரியாக பாகுபாடின்றி 6 முதல் 12ம் வகுப்பு வரை இணைந்து பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்தனர். மேலும், பெண்களுக்கான கோலப்போட்டி, பல்லாங்குழி, நொண்டி ஆகிய விளையாட்டுப்போட்டிகளும், மாணவர்களுக்கான சிலம்பம், பழு தூக்குதல் போன்ற வீர விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டன. இறுதியில் ஆசிரியர்களும் பங்கேற்கும் முறையில் உறியடி நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ, மாணவியர்களும், ஆசிரியர்களும் மகிழ்ச்சியுடன் ஈடுபட்டு விழாவை கண்டு களித்தனர். விழா ஏற்பாட்டினை ஆசிரியர்கள் நாகராஜ், அய்யனுராஜ், முத்துமாரி, ஜான்பால், ஆகியோர் செய்திருந்தனர்.

புதுக்கோட்டை: கோரம்பள்ளத்தில் அமைந்துள்ள ஸ்காட் கல்வி குழுமத்தின் ஒரு அங்கமான குட் ஷெப்பர்ட் மாடல் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவினை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியர் அனைவரும் தமிழரின் பாரம்பரிய உடை அணிந்து வந்தனர். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் பொங்கல் வைத்து கொண்டாடினர். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் பத்மினிவள்ளி ஆலோசனையின் படி ஆசிரியர் ஆசிரியைகள் செய்திருந்தனர்.
உடன்குடி: மெஞ்ஞானபுரம் அரசு ஆரம்பசுகாதாரநிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. இதையொட்டி பணியாளர்களுக்கு கரும்பு, கோலமிடும் போட்டி மற்றும் பல்வேறு போட்டிகள் நடந்தன. விழாவிற்கு வட்டார மருத்துவஅலுவலர் அனிபிரிமின் தலைமை வகித்தார். இதில் மருத்துவர்கள் ஜெகதிஷ், சுதர்சன், பேபியஸ், ஜுடி, நாயகி மற்றும் சுகாதாரப்பணியாளர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டனர்.    குளத்தூர்: குளத்தூர் பத்திரகாளியம்மன் கல்வி அறக்கட்டளையின் கீழ் இயங்கும் த.மாரியப்பன் நாடார், முத்துக்கனியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நான்காம் ஆண்டு பொன்விழா மற்றும் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம் நடந்தது.  கல்லூரி இயக்குனர் கோபால் தலைமை வகித்தார். கல்லூரி மக்கள் தொடர்பு அலுவலர் கெங்குமணி முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் அன்பழகன் வரவேற்று பேசினார். துறை தலைவர்கள், துறைபேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கல்லூரி வாசல் முன்பு கோலமிட்டு பொங்கல் வைத்து சூரியபகவானை வணங்கினர். தொடர்ந்து மாணவர்களுக்கு கபடிபோட்டி, உறி அடித்தல், ஸ்லோ பைக் ரேஸ், மாணவிகளுக்கு பலூன் உடைத்தல், மியூசிக் சேர் போட்டி நடந்தது. இதையடுத்து மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ் மற்றும் சிறப்பு பரிசுகளை கல்லூரி நிர்வாகத்தினர் வழங்கினர். தமிழ்த்துறை தலைவர் அன்னலட்சுமி நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

கோவில்பட்டி: கோவில்பட்டி வணிக வைசிய நடுநிலைப்பள்ளியில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவிற்கு பள்ளி செயலாளர் வெங்கடேஷ் தலைமை வகித்து விழாவை தொடங்கி வைத்தார். வணிக வைசிய சங்க இளைஞரணி தலைவர் வேல்முருகன், பொருளாளர் கருப்பசாமி, வட்டார கல்வி அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர் பழனிகுமார் வரவேற்றார்.  விழாவில் சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகை இல்மத்பானு கலந்து கொண்டார். பின்னர் பொங்கலிடப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. சங்க தலைவர் பூவலிங்கம், ரோட்டரி ஆளுநர் ஷேக்சலீம், ரோட்டரி சங்க மாவட்ட தலைவர் விநாயகாரமேஷ், ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் பாபு, ரோட்டரி சங்க தலைவர் பரமேஸ்வரன், முன்னாள் தலைவர் சீனிவாசன், முத்துசெல்வம், பிரபாகரன், நடராஜன், வணிக வைசிய சங்க நிர்வாககுழு உறுப்பினர்கள் முத்துராஜ், பெருமாள், தங்கமாரியப்பன், பாலமுருகன், மீனாட்சிசுந்தரம், சேகர் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். தலைமையாசிரியர் மாரியப்பன் விழாவை தொகுத்து வழங்கினார். செந்தில்குமார் நன்றி கூறினார்.  கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் பொங்கலிடபட்டு மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சி நடந்தது. கோவில்பட்டி உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி மையத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகௌரி கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து மாணவ, மாணவியருக்கு பொங்கல் வழங்கினார். மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது.

விளாத்திகுளம்:  விளாத்திகுளம் அம்பாள் வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாணவர்கள் ஏழு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு பொங்கலிட்டு கதிரவனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் படையல் வைக்கப்பட்டு இறைவழிபாடு செய்தனர். பின்னர் தமிழர்களின் பாரம்பரியத்தை நினைவு கூறும் வகையில் மாணவ மாணவியர்களின் சிலம்பாட்டம், ஒயிலாட்டம் ,தப்பாட்டம் உள்ளிட்ட நடனங்களுடனும் மாட்டுவண்டியில் ஏறி அம்பாள் வித்யாலயா விளையாட்டு அரங்கம் வரை ஊர்வலமாக சென்றனர். விழாவில் பள்ளி நிர்வாகி மார்க்கண்டேயன், செயலாளர் சுப்பாரெட்டி, நிர்வாக அலுவலர் நரசிம்மராஜ், பள்ளியின் முதல்வர் ஜெயகாந்த் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் உட்பட ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags : Equality Pongal Festival ,Thoothukudi District ,
× RELATED இலவச பட்டா வழங்கிய இடத்தில் குடியேறி பொதுமக்கள் போராட்டம்